170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதற்கும் அம்னோவிற்கும் தொடர்பு இல்லை

ஷா ஆலாம், மார்ச்.06-

குறிப்பிட்ட தனிநபர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் தங்கக் கட்டிகளும் கண்டுப் பிடிக்கப்பட்டதற்கும், அம்னோவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி அறிவித்துள்ளார்.

மிகப் பெரிய அளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் எந்தவொரு இடையூறும் விளைவிக்காமல் இந்த விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரணை செய்வதற்கு அனைத்து தரப்பினரும் வழிவிட வேண்டும். இதுவே அம்னோவின் நிலைப்பாடாகும் என்று டாக்டர் அஷ்ராஃப் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் உதவித் தலைவரும், முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள இந்த 170 மில்லியன் பணத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அம்னோவைச் சாடி வருகின்றனர்.

இதன் தொடர்பில் இன்று விளக்கம் அளிக்கையில் டாக்டர் அஷ்ராஃப் இவ்வாறு தெரிவித்தார். அதே வேளையில் இந்த பணத்திற்கும், அம்னோவிற்கும் தொடர்பு இருப்பதைப் போல் குற்றஞ்சாட்டி, விமர்சனம் செய்து வரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அம்னோ தயங்காது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS