இஸ்லாமாபாத், மார்ச்.06-
பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். கடந்த மார்ச் 4 ஆம் தேதி, பாகிஸ்தானில் ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, ‘தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான ‘ஜெய்ஷ் – அல் – புர்சான்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துழ்ல்ழ்லது. பலுசிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக மாண்டனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
இத்தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் அனைத்தும் அழிக்கப்படும். அமைதிக்கு விரோதமாக செயல்படுவர்களின் தீய நோக்கங்கள் தோல்வி அடையும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.