சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் களவாட முயற்சி

ஜார்ஜ்டவுன், மார்ச்.06-

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தைக் களவாடிய குற்றத்திற்காக துப்புரவு பணியாளர் ஒருவருக்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 11 மாத சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

47 வயது சி. முரளி என்ற அந்த நபர், கடந்த ஆண்டு டிசம்பர 26 ஆம் தேதி இரவு 8.11 மணியளவில் பினாங்கு கோம்தார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்து, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்காக செலுத்தவிருந்த கட்டணப் பணமான 7 ஆயிரத்து 259 ரிங்கிட்டை களவாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் கதவை உடைத்து அந்த நபர் உள்ளே நுழையும் காட்சி, அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவானதையும் ஓர் ஆதாரப் பொருளாக நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.

WATCH OUR LATEST NEWS