கூட்டரசு பிரதேச தினத்தையொட்டி இருவருக்கு உயரிய விருது

கோலாலம்பூர், மார்ச்.07-

கூட்டரசு பிரதேச தினத்தையொட்டி, இரு அமைச்சர்களுக்கு உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கூட்டரசு பிரதேசத்திற்குப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தாபாவிற்கு டத்தோஸ்ரீ விருதும், தொடர்புத்துறை அமைச்சர் பாஃமி பஃட்சீலுக்கு டத்தோ விருதும் வழங்ககப்பட்டுள்ளது.

கூட்டரசு பிரதேச விருதளிப்பு சடங்கு, இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

32 பிரமுகர்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளும், பட்டங்களும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டனர். அமைச்சர்களான டாக்டர் டாக்டர் ஸாலிஹா மற்றும் ஃபாமி ஃபாட்சீல் உட்பட 32 பிரமுகர்களும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த விருதளிப்பு சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் இதர அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS