புத்ராஜெயா, மார்ச்.07-
தாப்பா நாடாமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் தனது சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. இந்த இடைத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு, ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான பாரிசான் நேஷனலைச் சேர்ந்த இஷ்சாம் ஷாருடின், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மயக்கமுற்று காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.