சிரம்பான், மார்ச்.08-
சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங்கில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பதின்ம வயதுடைய இளைஞர்களை மோதித் தள்ளி மரணம் விளைவித்த ஹோண்டா ஜாஸ் வாகனமோட்டிக்கு லைசென்ஸ் கிடையாது என்பது தெரியவந்தது.
தகவல் சாதனங்கள் வெளியிட்ட தகவலைப் போல் அந்த ஹோண்டா ஜாஸ் வாகனமோட்டிக்கு 15 வயது கிடையாது. மாறாக, 18 வயது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ்தலைவ ஏசிபி முகமட் ஹாத்தா சே டின் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். புலன் விசாரணை பாதிக்கப்படாமலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொண்டும், ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை 8.30 மணியளவில் நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோடெனாஸ் கிரிஸ் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.