தகுதி வாய்ந்த வேட்பாளரைக் கண்டறிய மார்ச் 12 இல் சந்திப்பு

ஈப்போ, மார்ச்.08-

தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடவிருக்கும் தகுதியும், ஆற்றலும் வாய்ந்த வேட்பாளரைக் கண்டறிவதற்கு வரும் மார்ச் 12 ஆம் தேதி அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

சாத்தியமான வேட்பாளர்களின் கள மதிப்பீடுகளிலிருந்து முடிவுகளை எடுக்க இந்த சந்திப்பு நடத்தப்படும் என்று பேரா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான சாரணி முகமட் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிடுவதற்கு இதுவரையில் எட்டு வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் இருவர், தங்கள் பெயரை மீட்டுக் கொண்டு விட்டனர் என்று சாரணி குறிப்பிட்டார்.

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS