கோலாலம்பூர், மார்ச்.08-
சீன ஜோடியை எதிர்கொள்ள வேண்டுமானால், தேசிய மகளிர் பிரிவு இரட்டையர்களான பெர்லி டான்-எம் தீனா நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
உலகின் ஆறாம் நிலை ஜோடியான அவ்விருவரும், பிரான்சில் நடைபெற்ற ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் காலிறுதியில் புதிய சீன ஜோடியான ஜியா யி ஃபேன்-ஜாங் ஷு சியானிடம் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.
யி ஃபேன்-ஷு சியான், கடந்த ஜனவரியில் இருந்து ஜோடியாக இணைந்தனர். ஏற்கனவே மலேசிய பொது பூப்பந்து போட்டியில் இரண்டாம் பிடித்து, இந்தோனேசிய மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறி ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
அவ்விருவரும் இதற்கு முன் வெவ்வேறுடன் இணைந்து விளையாடி வந்தனர். தற்போது அவ்விருவரும் ஜோடி சேர்க்கப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் சமாளிக்க பெர்லியும் தீனாவும் சிரமப்பட்டதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் பயிற்சி இயக்குனர் ரெக்ஸி மைனக்கி ஒப்புக் கொண்டார். பெரும் சவாலாக உருவெடுத்துள்ள அவர்களை மலேசிய ஜோடி திறம்பட எதிர்கொள்ள இன்னும் கடின உழைப்பு அவசியம் என அவர் கூறினார்.