பிளவுகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

புத்ராஜெயா, மார்ச்.12-

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனம், சமயம் மற்றும் ஏழை மக்கள் ஆகியோரை முன்நிறுத்தி, மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து விரும்பத்தகாத சம்பவத்தை உண்டு பண்ண நினைக்கும் தரப்பினர் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS