இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் Masjid Jamek, LRT ரயில் நிலையத்தின் ஒரு பகுதி தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
எனினும் இச்சம்பவத்தில் உயிருடன் சேதமோ அல்லது ரயில் நிலையத்திற்கு பெரும் பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் Rapid Rail Sdn. Bhd. நிறுவனம் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இந்த சம்பவத்தினால் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை என்பதையும் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Wall collapse at Masjid Jamek LRT station, no one harmed