கோலாலம்பூர், மார்ச்.12-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கேப்புடன் தொடர்புப்படுத்தப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதற்கும், அம்னோவிற்கும் அறவே தொடர்பில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அந்த ரொக்கப்பணமும், தங்கக்கட்டிகளும் அம்னோவின் பொதுத் தேர்தலுக்குரிய அரசியல் நிதி என்று கூறப்படுவதையும் துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் வன்மையாக மறுத்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணமும், தங்கக்கட்டிகளும் அம்னோவுடன் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. காரணம், அந்த ரொக்கப்பணம் குறித்து அம்னோவிற்கு எதுவும் தெரியாது என்று அகமட் ஜாஹிட் விளக்கினார்.