கோலாலம்பூர், மார்ச்.13-
நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதியயான துன் தெங்கு மைமுன் துவான் மாட், பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
நீதி பரிபாலத்தில் கூட்டரசு நீதிமன்ற நீதிகளாக இருக்கின்ற 6 நீதிபதிகள் மற்றும் 2 நீதித்துறை உயர் நிலை அதிகாரிகள் இவ்வாண்டில் பதவி ஓய்வு பெருகின்றனர். எனினும் அவர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெங்கு மைமுன் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.