இயக்குனராகிறார் ரவி மோகன்.. ஹீரோ எதிர்பாராத ஒருவர்

நடிகர் ரவி மோகன் தனது பெயருக்கு முன்னால் இருந்த ஜெயம் என்பதை நீக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். தற்போது சில படங்கள் கைவசம் வைத்திருக்கும் அவர் அடுத்து இயக்குனராகக் களமிறங்கப் போகிறாராம்.

அதற்கான பணிகளையும் அவர் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் ரவி மோகன் படம் இயக்கப் போகிறார். அத்தகவலை யோகி பாபுவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

யோகி பாபு தற்போது மற்ற படங்களின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பதால் அதை எல்லாம் முடித்துவிட்டு இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்கப் போகிறாராம்.  

WATCH OUR LATEST NEWS