சுபாங்கில் சேவையை நிலைநிறுத்த பாதிக் ஏர் உறுதி

கோலாலம்பூர், மார்ச்.14-

சிக்கன கட்டண விமான நிறுவனமான பாதிக் ஏர், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திலேயே தனது விமானச் சேவையை விரிவுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் இன்னும் பல புதிய வழித் தடங்களை அதிக எண்ணிக்கையில் விரிவுப்படுத்துதற்கு அந்த விமான நிறுவனம், தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக பாதிக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய அணுகுமுறையை மேம்படுத்துவது மூலம் வணிகம் அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக வருகைப் புரியும் பயணிகளுக்கு முக்கிய நுழைவாயிலாக சுபாங் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க பாதிக் ஏர் உறுதி பூண்டு இருப்பதாக சந்திரன் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS