வளர்ப்பு மகளைக் கொலை செய்த குற்றத்திற்கு ஆடவருக்கு 8 ஆண்டு சிறை

சிரம்பான், மார்ச்.14-

தனது நான்கு வயது வளர்ப்பு மகளுக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக சிமெண்ட் லோரி ஓட்டுநர் ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அபு ஹாசான் டாருஸ் என்ற 34 வயதுடைய அந்த லோரி ஓட்டுருக்கு எதிரான குற்றச்சாட்டு, நோக்கமில்லா கொலையாக மாற்றப்பட்டது.

குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிப் பெற்றுள்ளதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நான்கு வயது சிறுமி, இறப்பதற்கு முன்னதாக அவர் உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கிம்மாஸ், கம்போங் ஹாலாசாரா பாரு லொண்டா என்ற இடத்தில் நான்கு வயது வளர்ப்பு மகள் உம்மி யுஸ்னானி சோபிஃயா என்ற சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக அந்த லோரி ஓட்டுநர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS