கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சலார். இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதுவும் பிரஷாந்த் நீலின் கேஜிஎப் 2 படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் இப்படம் வெளிவந்ததால், பெரிதும் எதிர்பார்த்தனர். மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றாலும் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். ஆனாலும் கூட சலார் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அண்மைய தகவலின்படி, சலார் 2 திரைப்படத்தை பிரபாஸ் தள்ளி வைத்து விட்டாராம். அதற்குமுன் ஹனு-மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஆகையால் இதன் பின்னர் தான் சலார் 2 படத்தில் பிரபாஸ் நடிப்பார் என கூறப்படுகிறது. சலார் 2 படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று வருத்தத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.