மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் பலி

கோல்கட்டா, மார்ச்.14-

மேற்கு வங்கத்தில் அதி வேகமாகச் செலுத்தப்பட்ட கார் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், சாப்ரா பகுதியில் சிலர் கடைக்கு சென்று விட்டு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, ரிக்ஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெண்கள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS