அது பழைய வீடியோ காணொளியாகும்

கோலாலம்பூர், மார்ச்.14-

கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் அருகில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காருக்குள் ஒருவரின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி, பழையது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மான் அப்பஃண்டி சுலைமான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மாலை 5 மணியளவில் போலீசார் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இறந்தவரின் சவப்பரிசோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு விசாரணையும் நடைபெற்றதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS