கடுமையான காயங்களுடன் ஆடவரின் சடலம் மீட்பு

சுபாங் ஜெயா, மார்ச்.14-

பூச்சோங்கில் நேற்று மாலையில் கடுமையான காயங்களுடன் ஆடவர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

பூச்சோங், கம்போங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் மீட்கப்பட்ட அந்த ஆடவரின் உடலில் தலை, காது மற்றும் முதுகில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடலைப் பார்த்த பெண் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS