பட்டாணி, மார்ச்.14-
தென் தாய்லாந்து, பட்டாணி, மாலான் மாவட்டத்தில் இன்று காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று குண்டு வெடித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Panya Utapao தெரிவித்தார். இதில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், ஒரு வாகனமும் கடுமையாக சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.