கூடைப் பந்து விளையாடிய மாணவன் திடீர் மரணம்

மலாக்கா தெங்கா, மார்ச்.14-

மலாக்காவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இன்று காலையில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்த 14 வயது மாணவன் ஒருவன், திடீரென்று மயங்கி விழுந்து மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த மாணவன் உடடினயாக மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டொப்பர் பதிட் தெரிவித்தார்.

அந்த மாணவனின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS