குவாந்தான், மார்ச்.15-
ஏப்ரல் 12 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் ஸ்ரீ பகாங் எஃப்சிக்கும் ஜோகூர் டாருல் தக்ஸிமுக்கும் (ஜேடிடி) இடையிலான மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்திற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 19 ஆம் தேதி மாலை 3 மணி தொடங்கி விற்பனை செய்யப்படும்.
டிக்கெட்டுகள் இணையம் மூலமாக மட்டுமே விற்கப்படும். நேரடியாக விற்கப்படாது என ஸ்ரீ பகாங் கால்பந்து கிளப் (SPFC) அறிவித்துள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும்.
ரிம54.59, ரிம75.19, ரிம157.59 மற்றும் ரிம209.09 ஆகிய நான்கு வகை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
டிக்கெட் விலையை நிர்ணயித்து முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம், ஜேடிடி மற்றும் ஸ்ரீ பகாங் ஆதரவாளர்கள் வலுவான ஆதரவை வழங்குவதற்காக தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதை எளிதாக்கும் என்று மலேசிய கால்பந்து லீக் நம்புகிறது.
ஆதரவாளர்கள் டிக்கெட்டுகளைப் பெறுவதை எளிதாக்க, டிக்கெட் விற்பனையானது முன்பு போலவே இறுதியாட்டத்தில் களமிறங்கும் குழுக்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும். இதன் மூலம் JDT மற்றும் ஸ்ரீ பகாங் ஆகியவை தங்களது ஆதரவாளர்களுக்கு முறையாகவும் சமமாகவும் டிக்கெட்டுகளை விற்க முடியும் என அது கூறியது.