அமிர்தசரஸ், மார்ச்.15-
பஞ்சாபின் அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தாகுர்த்வாரா கோவிலில் நள்ளிரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில் கொடியுடன் வந்த இருவர் கோவிலை நோட்டமிட்டனர். பிறகு, பொருள் ஒன்றை உள்ளே வீசி விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் கோவிலில் குண்டு வெடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
அச்சம்பவத்தில், கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பில்லை. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.