தம்பின், மார்ச்.15-
தம்பின், கிம்மாஸில் உள்ள மரத் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் எனப்படும் கொதிகலன் இயந்திரத்திற்குள் தவறி விழுந்து வங்காளதேசத் தொழிலாளர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7.19 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பு ஒன்றை, அந்த தொழிற்சாலையிலிருந்து பெற்றதாக கிம்மாஸ் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ராஸியவ் ஸம்ரி தெரிவித்தார்.
பத்து அடி ஆழமுள்ள அந்த கொதிகலன் இயந்திரத்திலிருந்து அந்த தொழிலாளரின் உடலை மீட்பதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கொதிலன் இயந்திரம் நிறுத்தப்பட்டு, வீரர்கள் வெப்பத் தடுப்பு ஆடையை அணிந்த நிலையில், அந்த கொதிகலனிலிருந்து 39 வயது தொழிலாளரின் உடலை மீட்டதாக முகமட் ராஸியவ் குறிப்பிட்டார்.