ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி இல்லை

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி இல்லை என் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர் உடல்நலக் குறைக் காரணமாக சென்னையில் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நோன்பு இருப்பதால் உடலில் நீர்ச் சத்து குறைந்ததாலும் பயணங்களால் ஏற்பட்ட களைப்பு காரணமாகவும்தான் 58 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர். அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் பரவிருந்ததது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS