இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்

சென்னை, மார்ச்.16-

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அவர் நலமாக இருப்பதாகவும் அவரது மகன் அமீன் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் ரஹீமாவும் இதே செய்தியை பகிர்ந்து கொண்டார். இரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமீன், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தனது தந்தை பலவீனமாக உணர்ந்ததால், சில வழக்கமான சோதனைகளை மேற்கொண்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS