எஸ்பிஆர்எம் தொடர்ந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்டும்

கோலாலம்பூர், மார்ச்.16-

ஊழல், பணமோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்மாயில் சாப்ரி தாக்கல் செய்த சொத்து ஆவணங்கள் உட்பட நூற்றுக்கணக்கான முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம் ஆய்வு செய்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தாக்கல் செய்த சொத்து ஆவணங்களும் இதில் அடங்கும். பெரிய அளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆவணங்களை ஆய்வு செய்ய எஸ்பிஆர்எம்முக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றதாக பெரித்தா ஹாரியான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நாளை நான்காவது முறையாக இஸ்மாயில் சப்ரி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இஸ்மாயில் சப்ரி நாளை ஒத்துழைப்பு அளித்தால் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடரும். விசாரணை முடிந்த பிறகு இஸ்மாயில் சப்ரி கைது செய்யப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை வரை காத்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS