கோலாலம்பூர், மார்ச்.16-
பி.கே.ஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஃமி பாஃட்சில் வரும் மே மாதம் நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். நான்கு துணைத் தலைவர்களில் ஒருவராகக் கட்சிக்காகப் பணியாற்றுவதற்குத் தமக்கு வாய்ப்பு இருப்பதாக பாஃமி நம்பிக்கை தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சிக்குள் போட்டி என்பது குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியாகும். ஆரோக்கியமான முறையில் போட்டியிட முயற்சிப்போம், மோசமான அம்சங்களைத் தவிர்ப்போம் என்று அவர் கூறினார். பி.கே.ஆர் தொலைநோக்கு பார்வை கொண்ட கட்சி என்பதால் தாமும் தமது குழுவும் சிறந்த யோசனைகளை வழங்குவோம் என்று அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.