அலோர் ஸ்டார், மார்ச்.17
போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு அமலாக்க அதிகாரிகளை கெடா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
நபர் நபரிடமிருந்து அந்த இரு அதிகாரிகளும் 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இருவரையும் விசாரணைக்கு ஏதுவாக ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.