ஜோகூர் பாரு, மார்ச்.17
நோன்பு மாதத்தில் பகல் வேளையில் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தியதற்காக, சீன ஆடவர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த முதிவர் ஒருவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோகூர் பாருவில் பேரங்காடி மையம் ஒன்றில் உள்ள உணவகத்தில் பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 9.08 மணிக்கு 21 வயது சீன ஆடவர் ஒருவரிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உணவருந்திக் கொண்டு இருந்த சீன ஆடவரை, முஸ்லிம் ஆடவர் என்று நினைத்து, அவரைத் தவறுதலாக தனது தந்தை அறைந்து விட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த முதியவரின் மகன் தெரிவித்துள்ளார்.