கிள்ளான், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம்

கிள்ளான், மார்ச்.17-

அரச நகரான கிள்ளான், ஜாலான் தெப்பி சுங்கையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம், நேற்று மார்ச் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை 8.01 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர் பூஜை, யஜமான சங்கல்பம் புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை ஆகிய நிகழ்வுகளுடன் காலை 10.01 மணிக்கு , ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம் தொடங்கியது.

ஆலய நிர்வாக உறுப்பினர்கள் , பொது மக்கள், திரளாக கலந்த கொண்ட இந்நிகழ்வை ஆலயத்தின் பிரதான குருக்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தினர்.

முன்னதாக, மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறப்புப் பூஜைகளுடன் ஸ்ரீ செல்வ விநாயகர் 308 த்ரிசதி கலஸ பூஜை, மூல மந்திர ஹோமம் முதற்கால மஹா பூர்ணாஹுதி, மகா தீபாரதனையோடு, பிரசாதமும் வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS