கோலாலம்பூர், மார்ச்.17-
2024 ஆம் ஆண்டில் உலகின் பத்து முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவையை வழங்கும் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான விமான நிலைய சேவைத் தரத்தில் முன்னணி விமான நிலையமாக KLIA உலக தர வரிசையில் இடம் பெற்றுள்ளதாக அதனை நிர்வகித்து வரும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
வான் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள விமான நிலையங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் உலகில் உள்ள முன்னணி விமான நிலையங்கள் குறித்து விமான நிலைய மன்றம் ஆண்டு தோறும் இந்த ஆய்வை நடத்தி வருகிறது. உலகில் பத்து முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக KLIA, 4.99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் குறிப்பிட்டுள்ளது.