பத்தாவது மாடியிலிருந்து குதிக்கத் தயாரான அந்நிய நாட்டவர் காப்பாற்றப்பட்டார்

கோலாலம்பூர், மார்ச்.17-

கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலில் உள்ள ஶ்ரீ பேரா அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து, உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக மிரட்டிய அந்நிய நாட்டவர் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மாலை 5.12 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகார்னோ ஸஹாரி தெரிவித்தார். அந்த அடுக்குமாடி வீட்டின் பின்புறம், கதவுக் கண்ணாடியை உடைத்து, சுவர் ஓரமாக நின்றுக் கொண்டு கீழே குதிக்கப் போவதாக உரக்கக் கத்தி, ஜன்னல் கண்ணாடி ஒவ்வொன்றையும் கழற்றி, கீழே வீசி அந்த நபர் ஆவேசமாக நடந்து கொண்டார்.

எனினும் அமலாக்கத் தரப்பினர், அந்த நபருடன் பேச்சுக் கொடுத்து, அவரை சமாதானப்படுத்தப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த நபர் தற்கொலை முயற்சியைக் கைவிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர், போதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சுகார்னோ ஸஹாரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS