சிரம்பான், மார்ச்.18-
லோரி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 226.3 ஆவது கிலோமீட்டரில் நெகிரி செம்பிலான், ரெம்பாவில் அருகில் நிகழ்நத்து.
தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான 32 மற்றும் 39 வயதுடைய லோரி ஓட்டநரும், உதவியாளரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி அஸ்மி அலி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட லோரி, மலாக்காவிலிருந்து செனாவாங்கை நோக்கிச் சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸ்மி அலி குறிப்பிட்டார்.