கோத்தா கினபாலு, மார்ச்.18-
சபா சட்டமன்றத்தின் 17 ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
சபா சட்டமன்றக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டமே 16 ஆவது சட்டமன்றத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதற்கு பிறகு 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபா சட்டமன்றக் கூட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதை மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஶ்ரீ காட்ஸிம் எம் யாயா உறுதிப்படுத்தியுள்ளார்.