இரு லோரிகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் பலி

தாப்பா, மார்ச்.18-

டிரெய்லர் லோரி ஒன்று, மற்றொரு லோரியுடன் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் தந்தையும், மகனும் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 331.8 ஆவது கிலோ மீட்டரில் தப்பாவிற்கு அருகில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியில் பயணித்த 40 வயது தந்தையும், 20 வயது மகனும் அந்த கனரக வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, தப்பிக்க முடியாமல் கொழுந்து விட்டு எரிந்த தீயில் கருகி மாண்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அந்த டிரெய்லர் லோரி, எதிரே சென்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது.

டிரெய்லர் லோரியின் தலை கடுமையாகச் சேதமுற்ற நிலையில் மின்னல் வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது

WATCH OUR LATEST NEWS