9 மாதங்கள் விண்வெளியில் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தனர்- எங்கும் மகிழ்ச்சி…..பெருமிதம்

வாஷிங்டன், மார்ச்.19-

விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA-வின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து, அங்கிருந்து 17 மணி நேர பயணத்தை கடந்து, வெற்றிகரமாக இன்று மார்ச் 19 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு பூமியை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் விண்வெளிக்கு பயணமான அவர்கள், 8 நாட்கள் தங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர்கள் பயணித்த Boeing Starliner விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய நிர்ப்பந்தத்தற்கு ஆளாகினர்.

அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

Elon Musk Space X நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய அரசு முயற்சியை முன்னெடுத்தது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Crew Dragon என்ற விண்கலம், Falcon 9 என்ற Rocket மூலம் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் வெற்றிகரமான நுழைந்த Dragon விண்கலம், விண்வெளி வீரர்களை Space X குழு மூலம் பாதுகாப்பாக மீட்டது.

அவர்கள் அங்கிருந்து பூமியை 4,578 முறை சுற்றி வந்து 195 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பூமியில் தரையிறங்கியுள்ளனர்.

விண்வெளியில் கடந்த ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் மீட்கப்பட்டது மூலம் தாம் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS