சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதையொட்டி மாதவன் வெளியிட்ட பதிவு

அனைத்துலக விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்பியுள்ளார். சூழ்நிலை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் உடன் அவரது குழுவும் விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் அவர் 17 மணி நேரபி பயணத்திற்குப் பின் இன்று பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரிமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம், கப்பலில் ஏற்பட்டது. பின் டிராகன் விண்கலத்தில் உள்ளே சுனிதா வில்லியம்ஸ் உடன் இணைந்து 4 வீரர்களும் வெளியே வந்து கையசைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். விண்கலத்தில் இருந்து வெளியே வந்த நான்கு பேரும் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மிக ஆரோக்கியமாக உள்ளார் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதில், நடிகர் மாதவன் சுனிதா வில்லியம்ஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

மீண்டும் பூமிக்கு வாருங்கள் எங்களின் அன்புள்ள சுனிதா வில்லியம்ஸ். எங்களது பிரார்த்தனைகளுக்கு விடை கிடைத்துள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உங்களது புன்னகையையும் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. 260 நாட்களுக்கு மேல் உறுதியில்லாத நிலை காணப்பட்ட வேளை, கடவுள் அருளாலும் மில்லியன் கணக்கானோரின் பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைத்துள்ளது. அவர்களைக் கொண்டு வந்த அனைவருக்கும் பாராட்டுகள். கடவுள் ஆசி உங்களுக்கு உண்டு என நடிகர் மாதவன் பதிவிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS