கோலாலம்பூர், மார்ச்.19-
லிவர்பூல் மற்றும் பார்சிலோனா அணிகளின் முன்னாள் நட்சத்திரத்தின் வருகையால் மலேசிய லீக் அலங்கரிக்கப்படவிருக்கிறது. லீகா எம்மில் உள்ள மிகவும் பிரலமான கிளப்பொன்றின் உயர் நிலை நிர்வாகத்தில் லூயிஸ் கார்சியா இணையலாம் எனக் கூறப்படுகிறது.
லிவர்பூல் மற்றும் பார்சிலோனாவில் ஒரு காலத்தில் தனக்கென ஒரு பெயரை நிலை நிறுத்தியிருந்த கார்சியா, அக்கிளப்பில் தலைமை செயல்முறை அதிகாரி (CEO) ) பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
46 வயதான ஸ்பெயின் அந்த முன்னாள் அனைத்துலக வீரரின் பெயர் உலக கால்பந்து ரசிகர்களுக்கு நன்கு தெரியும். குறிப்பாக 2004 முதல் 2007 வரை லிவர்பூலில் இருந்தபோது அவர் மிகவும் பேசப்பட்டவர்.
ரெட்ஸுடனான காலத்தில், அவர் 2005 இல் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும், FA கிண்ணத்தையும் (2006) வென்றது உட்பட பல வெற்றிகளைப் பெற்றார்.
இந்திய கிளப், அட்லெட்டிகோ கொல்கத்தா மற்றும் ஆஸ்திரேலிய கிளப்பான சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் ஆகியவற்றுடன் ஆசிய கால்பந்து அரங்கில் இருந்த அனுபவமும் கார்சியாவுக்கு உள்ளது.