22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.19-

வரும் ஹரிராயா பொருநாளை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உச்சக்கட்ட நேரத்தில் 22 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையிலும் ஒவ்வொரு நாளும் அதிகமான வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸாகாரியா அஹ்மாட் தெரிவித்தார்.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் முதல் தேதி ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில் ஏப்ரல் 4 ஆம் தேதி Qing Ming விழா கொண்டாடப்படுகிறது. வாகனங்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட சற்று கூடுதலாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS