புத்ராஜெயா, மார்ச்.19-
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
எனினும் அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது தொடர்பில் முடிவு எடுப்பதாக இருந்தாலும், அது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கியூபெக்ஸ் கடந்த வாரம் கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோ பாஃமி மேற்கொண்டவாறு கூறினார்.