புதுடெல்லி, மார்ச்.19-
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்ன என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர். தனது வாழ்க்கை முழுவதும் முன்மாதிரி பெண்மணியாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவரின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மையின் சோதனையாக இருந்தது.
விண்வெளி ஆய்வு என்பதும் மனித ஆற்றலின் வரம்புகளைத் தாண்டியது ஆகும். பாதுகாப்பாக பூமி திரும்ப அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்” என பிரதமர் மோடி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விண்வெளி நிலையத்தில் இருந்து, பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.