ஷா ஆலாம், மார்ச்.19-
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள், அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையை பெறுவர் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
வலுவான நிதி நிலை செயல்பாட்டிற்காக மாநில அரசு ஊழியர்களின் சேவைத் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 18 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்காக 26 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.