இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா?

நடிகர் அஜித் நடித்திருந்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குநராக முத்திரைப் பதித்தார். பின் கேப்டன் விஜயகாந்துடன் கைகோர்த்து ரமணா படத்தை இயக்கி தனது வெற்றிப் பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஒவ்வொரு படத்திலும் மேலே உயர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தற்போது இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம்தான் மதராஸி. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமக்கு இருக்கும் நீண்ட நாள் ஆசை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“சிக்கந்தர் படத்திற்குப் பிறகு, நான் ஒரு தமிழ் படத்தை முடிக்க வேண்டும். அதன் பின் நான் ஷாருக் உடன் இணைந்து பணியாற்றுவது பற்றி யோசிப்பேன். நான் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். கண்டிப்பாக அது நடக்கும்” என்று முருகதாஸ் கூறியிருந்தார்.  

WATCH OUR LATEST NEWS