கோலாலம்பூர், மார்ச்.23-
கேடபள்யூஎஸ்பி எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் இரண்டு விழுக்காட்டுப் பங்களிப்புக்கான முன்மொழிவை ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று உற்பத்தித் துறை நம்புகிறது. வணிகங்களின் செலவின அதிகரிப்பை எதிர்கொள்கின்றன. ஜூலை 2025 முதல் ஒழுங்குமுறை காலம் 4இன் கீழ், அடிப்படை மின்சாரக் கட்டணத்தில் 14.2 விழுக்காடு அதிகரிப்பையும் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் இயக்கச் செலவுகளின் சுமையை மேலும் அதிகரிக்கிறது எனக் கூறினார் மலேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் சோ தியான் லாய்.
தாம் குறிப்பிட்ட இந்த ஒத்தி வைப்பானது, இந்த நிதி சவால்களைக் கையாள வணிகங்களுக்கு உதவியாக இருக்கும் என பெர்னாமாவிடம் கூறினார். கடந்த பிப்ரவரி 3 ஆம் நாளன்று, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் தலா 2 விழுக்காடாக ஊழியர் சேமநிதி வாரியப் பங்களிப்பு நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது, இது மலேசிய தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் 12 முதல் 13 விழுக்காடு வரையிலான கட்டாய விகிதத்தை விடக் குறைவு. குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் தொழில்கள் உட்பட, பங்களிப்பு விகிதங்களில் சாத்தியமான மாற்றங்களோடு, எதிர்காலக் கொள்கை மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு தனியார் துறையுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று சோ தியான் லாய் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.