கோலாலம்பூர், மார்ச்.23-
அடுத்த மாதம் பேரா, ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள மலேசிய சோசலிஸ்ட் கட்சிக்கு மூடா கட்சி ஆதரவளிக்கும். விரைவில் பிஎஸ்எம்முடன் இணைந்து தேர்தல் களத்தில் ஒத்துழைக்க உள்ளதாக மூடா கட்சியின் அரசியல் தொடர்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பரப்புரையின் மூலம் மக்களின் குரலைக் கொண்டு வருவதையும், இனவாத அரசியலையும் உயரடுக்கு போட்டியையும் நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடும் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் S அருட்செல்வன் அறிவித்தார். 15வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பிஎஸ்எம், அதன் வேட்பாளர் பவானி KS ஐந்து முனை போட்டியில் 586 வாக்குகளை மட்டுமே பெற்றதால் டெப்பாசிட்டை இழந்தார்.