தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் மீண்டும் மீண்டும் சேருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி ஒரு விஷயம் தான் நடந்துள்ளது.
நாயகன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இப்படம் இன்னும் 75 நாட்களில் வெளியாக உள்ளதாம்.
அதாவது வரும் ஜுன் 5ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வந்துள்ளது.