போபால், மார்ச்.23-
மத்தியப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து நாக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டது. பேருந்து பார்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமன்பூர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேருந்து ஓட்டுனர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் பலியான மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.