சிசுவின் உடல் கழிப்பறைத் தொட்டியில் மீட்பு

சுங்கை பெசார், மார்ச்.24-

புதியதாகப் பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் சிசு ஒன்றின் உடல், கழிப்பறைத் தொட்டியில் மீட்கப்பட்டது.

நேற்று மதியம் 12 மணியளவில் சிலாங்கூர், சபா பெர்னாம், சுங்கை ஹாஜி டோரானி, பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்தில் அந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக சபா பெர்னம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யூசோப் அஹ்மாட் தெரிவித்தார்.

பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் மீட்கப்பட்ட அந்த சிசு, ஆணா, பெண்ணா என்பது குறித்து உறுதிச் செய்யப்படவில்லை.

பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்தில் பொருத்தப்படட் சிசிடிவி கேமரா பதிவின் வழி சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS