கோலாலம்பூர், மார்ச்.24-
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பலர், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் நிலை இருப்பதால் வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதுடன் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பலர் வடக்கை நோக்கியும், தெற்கையும் நோக்கி புறப்படுவார்கள் என்பதால் தூரப் பயணத்தை மேற்கொள்கின்றவர்கள் தங்கள் பயணத்தைப் திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டொரு நாட்களில் பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு சராசரி 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் கணித்துள்ளது.